SELAMAT BERSARA PN.ROHAIZAH DAN SELAMAT BERTUGAS DI SEKOLAH BARU PN.HAJJAH NORAINI BT ABD MUIN & ROSLIN.
மூவர்.வலமிருந்து திருமதி ரோஸ்லின், திருமதி நொராய்னி மற்றொருவர் திருமதி ரொகாய்சா.
இவர்கள்சுங்கை சோ இடைநிலைப்பள்ளியில் நீண்ட காலமாக பணியாற்றியவர்கள்.
திருமதி நொராய்னி- சிறுவயது முதல் இந்தியர்களின் பின்னணியில்
வளர்க்கப்பட்டவர். தமிழ்மொழியில் பேசினால் நன்றாக விளங்கும் ஆனால் அம்மொழியை அவர் பேசியதில்லை. பாசமலர் சிவாஜி கணெசனின் படம் முதல் இன்றைய நடிகர்களின் படம் வரை பார்த்து ரசிப்பவர். இவரது சேவையில் முத்தாய்ப்பான செயல் தமிழையும் தமிழ் இலக்கியப் பாடத்தையும் பாட அட்டவணையில் இணைத்து நம் மாணவர்கள் பயன் பெற அமைத்ததேயாகும். பல்வேறு பிரச்சினைகளுக்கு அப்பால் துணிந்து செயல் படுத்திய இவர் ஒரு தழிழரல்லாத தமிழ் நெஞ்சர். இவர் முதல்வராக பதவி உயர்வு பெற்று SMK GEDANGSA பள்ளிக்குச் செல்கிறார். இவர் வாழ்க வளமுடன்.
திருமதி ரொகாய்சா. பல ஆண்டுகாலமாக புகுமுக வகுப்பு முதல் படிவம் இரண்டு வரை மாலை வகுப்பில் போதித்துள்ளார். பாராபட்சமின்றி நடுநிலையாக செயல்படுபவராகவும் கண்டிப்புமிக்கவராகவும் பணியாற்றியிருக்கின்றார். நம்மின மாணவர்களை இடைநிலைப்பள்ளியில் ஆரம்ப காலந்தொட்டு ஒழுங்கு படுத்தும் ஒரு ஜீவன் இவராவார்.பணி ஒய்வு பெற்றுச் செல்கிறார். நோய் நொடியின்றி நலமாய் வாழ நாம் பிரார்த்திப்போமாக.
திருமதி ரோஸ்லின் பள்ளியின் குமாஸ்தா. தமிழ் நெஞ்சர், இவர் பதவி உயர்வு பெற்று ரவாங் தமிழ்ப்பள்ளிக்குச் செல்கிறார். வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment